யாழில் இரவில் அதிரடி காட்டிய STF ; பாழடைந்த கட்டிடத்திற்குள் காத்திருந்த அதிர்ச்சி
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆழியவளை பகுதியில் பாழடைந்த கட்டிடம் ஒன்றிலிருந்து 14 கிலோ 500 கிராம் கஞ்சா பொதிகள் சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் நேற்று (16) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக நடவடிக்கை
ஆழியவளை பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான பொதிகள் காணப்படுவதாக பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினர் அங்கு சென்றுள்ளனர்.
இதன்போது, குறித்த கட்டிடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகளை கைப்பற்றிய அதிரடிப்படையினர், அவற்றை மேலதிக நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
லசந்த விக்ரமதுங்க படு கொலை விசாரணையுடன் தொடர்புபட்ட உயரதிகாரி உயிர்மாய்ப்பு ; துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் மீட்கப்பட்ட உடல்
மீட்கப்பட்ட கஞ்சா பழுதடைந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.