யாழில் மின்கசிவால் ஏற்பட்ட விபரீதம்
யாழ்ப்பாணத்தில் வீடொன்று தீக்கிரையானதில், பெறுமதியான பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் என்பன தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புத்தூர் கலைமதி பகுதியில் உள்ள வீடொன்றே நேற்று திங்கட்கிழமை (26) இரவு திடீரென தீப்பற்றியுள்ளது.
வீட்டில் மின் கசிவு
சம்பவத்தை அடுத்து வீட்டில் இருந்து வெளியேறியவர்கள், அயலவர்களின் உதவியுடன் தீயினை கட்டுப்படுத்த முயற்சித்த போதும் அது பயனளிக்காத நிலையில், யாழ்.மாநகர சபை தீயணைப்பு படையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் அவ்விடத்துக்கு விரைந்து தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் வீட்டில் ஏற்பட்ட மின் கசிவுவே வீடு தீப்பிடித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ள நிலையில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.