தமிழகத்தில் நடிகர்கள் திடீர் பிரவேசம் ; அரசியலில் குதித்த பிரபல இயக்குநர்!
நடிகை குஷ்புவின் கணவரும், பிரபல நடிகரும், இயக்குநருமான இயக்குநர் சுந்தர் .சி. அரசியலில் குதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் பாஜக, பாமக, தமாகா, அமமுக, ஐஜேகே, புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. இக்கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

நடிகர்கள் திடீர் அரசியல் பிரவேசம்
அந்த வகையில், புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதியில் பிரபல நடிகரும், இயக்குநருமான இயக்குநர் சுந்தர் .சி. போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சுந்தர் .சி. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சர் பி.டி.ஆரின் தொகுதியான மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி. போட்டியிடுவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் தாக்குதல்; 12அமெரிக்கப் படையினர் காயம்; வளைகுடாவில் தொடரும் பதற்றம்
அதேவேளை கடந்த வாரம் விஜய்யின் TVK கட்சிக்கு எதிராக AVK என்கிற பெயரில் புதிய கட்சியை தொடங்குவதகாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் அறிவித்ததுடன் , TVK - AVK ஆகிய இரண்டு கட்சிகள் இடையே தான் போட்டி என்றும் சவால் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.