தலையில் காயங்களுடன் மூதாட்டி சடலமாக மீட்பு; நடந்தது என்ன?
இரத்தினபுரி - இறக்குவானை, கலஹிட்டிய பகுதியில் வீடொன்றிற்குள் மூதாட்டி ஒருவர் தலையில் காயங்களுடன் சலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணயை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துக் கிடப்பதாக இறக்குவானை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை (21) கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொலையாக இருக்கக்கூடும் எனச் சந்தேகம்
உயிரிழந்தவர் கலஹிட்டிய பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய பெண் ஆவார். இப் பெண் தனது மகனுடன் கலஹிட்டிய பகுதியிலுள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இன்னிலையில் சம்பவ தினத்தன்று வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய மகன், தாய் தலையில் பலத்த இரத்தக் காயங்களுடன் வீட்டின் உள்ளே இறந்துகிடப்பதைக் கண்டுள்ளார்.
இச் சம்பவம் கொலையாக இருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதால், இது தொடர்பான நீதவான் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக இறக்குவானை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.