திலீத் ஜயவீரவின் எழுத்தாணை மனு விசாரணை இன்றி தள்ளுபடி ; மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் தொடர்பாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தமக்கு எதிராகப் பிறப்பித்த தீர்மானத்தை இரத்துச் செய்யக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் திலீத் ஜயவீர தாக்கல் செய்த எழுத்தாணை மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற பிரதம நீதியரசர் ரோஹந்த அபேசூரிய, நீதியரசர்களான சமத் மொராயஸ் மற்றும் ஆதித்ய பட்டபெண்டிகே ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் தமக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி திலீத் ஜயவீர இந்த எழுத்தாணை மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.