மாடியில் இருந்து வெற்றிலை எச்சில் துப்பியவர் உயிரிழப்பு
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், கஞ்ச் பசோடா நகரில் வீட்டின் மாடியில் இருந்து வெற்றிலை எச்சிலை உமிழ்ந்தபோது, மின்சாரம் தாக்கி சுமார் 60 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக இதிய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்த நபர் துப்பிய வெற்றிலை எச்சில் வீட்டிற்கு அருகில் சென்றுகொண்டிருந்த மின்சாரக் கம்பியில் பட்டதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் வீடுகளுக்கு மிக அருகில் அபாயகரமான முறையில் அமைந்துள்ள மின்சாரக் கம்பிகளை வேறு இடங்களுக்கு மாற்றுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.