கோட்டாபயவை நானா பதவி விலகக் கூறினேன் ?(Video)

Parliament of Sri Lanka Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe President of Sri lanka
By Sulokshi Nov 24, 2022 11:11 AM GMT
Report

  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நானா பதவி விலகக் கூறினேன்? என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்று வரும் வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“போராட்டத்தின் விளைவினால் ஜனாதிபதியாகிய நான், போராட்டக்காரர்களை வழிபட வேண்டும் என்று நேற்று விஜித ஹேரத் தெரிவித்திருந்தார். இந்நாட்டின் அரசமைப்புக்கு இணங்க, ஜனாதிபதி பதவி விலகினால், அந்தப் பதவியை பிரதமர்தான் பொறுப்பேற்க வேண்டும்.

நான் ஜனாதிபதியானபோது, அப்பதவிலியிருந்து விலகுமாறு எனது வீட்டை தீக்கிரையாக்கினார்கள். ஆனால், நான் விலகவில்லை. நான் ஜனாதிபதி பதவியை எனக்குத் தருமாறு கேட்கவும் இல்லை. கடிதங்களை எழுதவும் இல்லை.

இந்த நாட்டின் நிலைமை மோசமாக இருந்த காரணத்தினால், மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்டவர்கள் ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்குமாறு என்னிடம் வலியுறுத்தினார்கள்.

மாறாக எதிர்க்கட்சித் தலைவர்தான், மே 12 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியதை மறந்துவிட்டார். அந்தக் கடிதத்தில், ஏனயை கட்சிகளுடன் இணைந்து இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க பிரதமர் பதவியை பொறுப்பேற்கத் தயார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இப்படி எழுதிவிட்டு, ஏன் என்னை இவர்கள் குறைக்கூற வேண்டும். இந்தக் கடிதம் கிடைக்கும் முன்பே நான் பிரதமராக பதவியேற்றுவிட்டேன். அத்தோடு, அந்தக் கடிதத்தில் புதிய பிரதமர் நியமிக்கப்பட்ட பின்னர் குறிப்பிட்ட காலத்தில் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதனால்தான் நான் பிரதமராகி இரண்டு மாதங்களின் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்து இராஜினாமா செய்தார் எனவும் ஜனாதிபதி கூறினார்.

நாட்டில் இடம்பெற்ற மேலதிக செய்திகளின் தொகுப்[பு காணொளியில்...

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US