ரணிலை பார்வையிட வைத்தியசாலை சென்ற ஹரிணி அமரசூரிய?
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை காண, பிரதமர் ஹரிணி சென்றதாக சமூகவலைத்தளங்களில் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றும் சென்று பார்வையிட்டார்.
இந்நிலையில், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, திருமதி மைத்ரி விக்கிரமசிங்கவுடன் ரணிலை வைத்தியசாலையில், ஞாயிற்றுக்கிழமை (24) பார்வையிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான செய்திகள் வெளியிடப்படுவதானது ஊடக தர்மத்துக்கு முரணானது என்றும் பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு பிரதமர் தொடர்பில் இவ்வாறான செய்தி வெளியிடப்பட்டுள்ளமை கவலைக்குரியது என்றும், அந்த செய்தியின் உண்மை தன்மையை வெளிப்படுத்துமாறும் குறித்த ஊடக நிறுவனத்தை வலியுறுத்துவதாக பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.