டயனா கமகே ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கம்
தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி டயனா கமகேயை (Diana Gamage) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்து நீக்குமாறு அக்கட்சி தேர்தல்கள் திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
குறித்த தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உறுதிப்படுத்தியுள்ளார்.
திருமதி டயனா கமகே (Diana Gamage) கட்சியின் கொள்ளைக்களுக்கு புறம்பாக செயற்பட்டமையால் கட்சியினால் ஒழுங்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இறுதி முடிவுகளை கட்சியின் நிறைவேற்றுக் குழுவில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
திருமதி டயனா கமகே 2020 பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டவர்.
இன்று கூடிய நிறிவேற்றுக் குழுவில் திருமதி டயனா கமகே(Diana Gamage) கட்சியின் கொள்ளைகளைக்குப் புறம்பாக செயற்பட்டமை நிரூபனமானதால் அவருடைய பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்கக் கோரி தேர்தல்கள் செயலகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.