செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் கடலென குவிந்த பக்தர்கள் கூட்டம்!
ஈழத்தின் வரலாற்று பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த பெரும் திருவிழாவின் தீர்த்தத் திருவிழா இன்று காலை சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
கடந்த 4 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான செல்வச்சந்நிதி முருகன் ஆலய மகோற்சவ திருவிழா தொடர்ந்து 14 நாட்கள் நடைபெற்று , நேற்று தேர் திருவிழா இடம்பெறவுள்ளது.
இதேவேளை , செல்வச்சந்நிதி முருகனுக்கு இன்று காலை தீர்த்தத் திருவிழாவும் மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
அதேவேளை நேற்றையதினம் தேர்த்திருவிழாவில் கடலென பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துதுடன், பல அடியவர்கள் காவடிகள் , கற்பூர சட்டிகள் எடுத்தும்.அங்க பிரதிஸ்ட்டை அடித்தும் தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர்.