அமெரிக்கா செய்த பெரும் சம்பவம் ; தகர்க்கபட்ட ஈரானின் பிரம்மாண்ட ஏவுகணை உற்பத்தித்தளம்
ஈரானின் கராஜ் பகுதியில் அமைந்துள்ள மிகமுக்கியமான ஏவுகணை உற்பத்தி ஆலை தாக்கி அழிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விடயத்தை அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போர் பதற்றம்
அமெரிக்கப் படைகள், அண்டை நாடுகள் மற்றும் சர்வதேச வணிகக் கப்பல்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஒன்றிணைக்கும் பணியில் இந்த ஆலை ஈடுபட்டு வந்ததாகச் சென்ட்காம் சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய கிழக்கில் ஈரானின் ஏவுகணை உற்பத்தித் திறனை முடக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை ஈரானுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.