பிரான்ஸில் புகலிட கோரிக்கையாளர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள நிலை!
பிரான்ஸில் புகலிடக் கோரிக்கையாளர்களின் சட்டங்களைக் கடுமையாக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவதால், கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரலாம் என தெரிய வருகிறது.
பாரிஸில் 12 வயது சிறுமி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த சிக்கல் தீவிரமடைந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று சிறுமி காணாமல்போனதாக முறைப்பாடு செய்யப்பட்டது.
அன்று மாலை, சிறுமியின் சடலம் அடைக்கப்பட்டிருந்த பெட்டி ஒன்று சிறுமியின் வீட்டுக்கு அருகே கண்டெடுக்கப்பட்டது.
சிறுமியின் உடலில் பல வெட்டுக்காயங்கள் இருந்தன. மூச்சு திணறி உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கைகள் தெரிவித்தள்ளன.
இந்த சம்பவத்தின் தொடர்பில் 24 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் வெளிநாட்டிலிருந்து பிரான்ஸிற்குக்கு சட்டவிரோதமாக வந்தவராகும். கைது செய்யப்பட்ட பெண் உண்மையில் ஒரு அல்ஜீரிய குடியேறியவர், அவர் ஏற்கனவே பிரான்ஸ் விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளார்.
இருப்பினும், அவர் இதுவரையில் நாட்டை விட்டு வெளியேற்றப்படாமையினால் பரிதாபமாக ஒரு சிறுமி உயிரிழக்க காரணமாகியுள்ளதென குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன.
நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழையும் குடியேறிகள் பல குற்ற செயல்களில் ஈடுபடுவதாக பிரதான எதிர்க்கட்சித் தலைவர் மரீன் லு பென் Marine Le Pen தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கட்டுப்பாடற்ற புலம்பெயர்தல் கொள்கையை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அரசாங்கத்தால் இவர்களை நாடு கடத்த இயலவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளனர். சட்ட ஒழுங்கை கட்டிக்காக்க அரசாங்கம் தவறிவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்த நெருக்கடிக்கு தீவிரமடைந்தால் சட்டவிரோதமாக பிரான்ஸ் வந்த புகலிட கோரிக்கையாளர்கள் கடும் நெருக்கடியான நிலைமைக்கு முகம் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை உடனடியாக நாடு கடத்தும் சட்டத்தை தீவிரப்படுத்த திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.