நாட்டில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு டெங்கு அபாயம் தீவிரம்

Sri Lanka Dengue Prevalence in Sri Lanka Ananda Wijepala
By Sahana Jul 10, 2026 05:15 PM GMT
Report

மேல் மாகாணத்தில் டெங்கு நுளம்புகளின் குடம்பிகளின் அடர்த்தி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதால், அடுத்த இரண்டு வாரங்கள் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் முக்கியமானதும் அபாயகரமானதுமான காலப்பகுதியாக இருக்கும் என டெங்கு முகாமைத்துவம் தொடர்பான விசேட நிபுணர் குழுவின் உறுப்பினர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிரம எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

தற்போதைய டெங்கு பரவல் நிலை 2017ஆம் ஆண்டு பதிவான மோசமான டெங்கு பரவலையும் விட தீவிரமடையக்கூடும் என சுட்டிக்காட்டினார்.

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், மேல் மாகாண வைத்தியசாலைகளின் கொள்ளளவு ஏற்கனவே மீறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு டெங்கு அபாயம் தீவிரம் | Dengue Risk To Increase For Next Two Weeks

சில வைத்தியசாலைகளில் ஒரே படுக்கையில் இரண்டு அல்லது மூன்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே, டெங்கு பரவலுக்கான முன்னறிகுறிகள் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களிலேயே தென்பட்டதாக தெரிவித்தார்.

தென்மேற்குப் பருவமழைக் காலமான மே, ஜூன், ஜூலை மாதங்களிலும், வடகிழக்குப் பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களிலும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கமானதாக இருப்பதாகவும், இத்தகைய சூழ்நிலைகளுக்கு சுகாதாரத் துறை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பெப்ரவரி முதல் ஏப்ரல் வரை நிலவிய கடும் வெப்பம் காரணமாக டெங்கு நுளம்புகள் உருவாகும் வேகம் குறைவாக இருந்ததாகவும், தற்போது காலநிலை மாற்றத்தால் பரவல் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு டெங்கு அபாயம் தீவிரம் | Dengue Risk To Increase For Next Two Weeks

டெங்கு தடுப்பூசி குறித்து கருத்து தெரிவித்த அவர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் மூன்று வகையான டெங்கு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

எனினும், இலங்கையில் அவற்றை அறிமுகப்படுத்துவது குறித்து பல்வேறு அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும், தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டாலும் உடனடியாக நோய்த் தொற்றைக் குறைக்க முடியாது என்றும் அவர் விளக்கினார்.

இரண்டு டோஸ்களைக் கொண்ட இந்தத் தடுப்பூசி முழுமையாக செயல்பட குறிப்பிட்ட காலம் தேவைப்படுவதுடன், ஏற்கனவே ஒருமுறை டெங்கு பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அதன் பாதுகாப்புத் திறன் அதிகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக யாழில் விசேட நடவடிக்கை

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக யாழில் விசேட நடவடிக்கை

மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US