வட மாகாணம் தொடர்பில் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரபல வைத்தியர்!
வட மாகாணத்தில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் 3100 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (15-12-2023) மாலை யாழ்ப்பாணம் - பண்ணையில் அமைந்துள்ள வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் டெங்கு நுளம்பின் தாக்கம் பற்றிய ஊடகவியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
குறித்த சந்திப்பின் போது கலந்துகொண்டு உரையாற்றும்போதே வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்தாவது,
வடக்கில் யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பின் தாக்கத்தினால் 2600 நோயாளர்களும், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவவுனியா ஆகிய மாவட்டங்களில் ஏனைய நோயாளிகளும் இனங்காணப்பட்டனர்.
யாழில் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துள்ளது.
அதன்படி கடந்த வாரத்தில் 02 மரணங்கள் இடம்பெற்றுள்ளது. அதில் ஒருவர் யாழ்ப்பாண மாநகர சபைக்கு உட்பட்டவர். மற்றையவர் வல்வெட்டித்துறையினை சேர்ந்தவராவார்.
கோப்பாய், சண்டிலிப்பாய், யாழ்பபாணம், நல்லூர், பருத்தித்துறை, கரவெட்டி, ஆகிய பிரதேசங்களில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.
எனவே பொதுமக்கள் தாங்கள் சார்ந்த பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்க எண்ண வேண்டும். அப்படி நோய் எற்படுகின்ற ஒருவருக்கு தகுதிவாய்ந்த வைத்தியரை நாடுவது சாலச்சிறந்தது.
வட மாகாணத்தில் டெங்கு நுளம்பு தொடர்பான முறைப்பாடுகள் ஆலோசனைகள் தாக்க தொடர்பான விபரங்கள் பற்றிய அறிந்துகொள்ளவும், தெரிவிக்கவும். அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
(0761799901) இவை 24 மணித்தியாயல சேவையாக காணப்படுவதுடன், முறைப்பாடுகளை வட்சப் மூலம் வடமாகாண சுகாதார திணைக்களத்திற்கு அறிவிக்கமுடியுமென அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் வடமாகாண சமூதாய மருத்துவர் ஆலோசகர் ஜீ. ரஜீபன், வட மாகாண பொதுசுகாதார நோய் தடுப்பு இணைப்பாளர் வைத்தியர் ஏ.திலீபன் ஆகியோர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.