பீடியின் விலையை அதிகரிக்க கோரிக்கை
பீடி ஒன்றின் விலையை 4 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பீடி உற்பத்தி தொழில்துறையினர் கோரியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மதுவரித் திணைக்கள ஊடகப் பேச்சாளரும், மேலதிக மதுவரி ஆணையாளருமான கபில குமாரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
பீடியின் விலையை அதிகரிக்க அந்தத் தொழிற்துறையினருக்கு சட்ட ரீதியான தடை எதுவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு மதுவரித் திணைக்கள அதிகாரிகளை வழமையான சேவையில் இருந்து விலக்கி புகையிலை கைத்தொழிலை ஒழுங்குமுறைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்த மதுவரித் திணைக்கள ஆணையாளர் தீர்மானித்துள்ளார்.