இரவில் நிம்மதியாக உறங்க வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க!
உணவுக்கும் தூக்கத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? இரவு உணவு டயட்டில் சரியான உணவை எடுத்துகொண்டால், நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
மேலும், உணவுமுறையும், உண்ணும் நேரமும் முக்கிய பங்கு வகிக்கும். இரவில் தாமதமாக உணவை சாப்பிட்டால், உங்கள் செரிமான செயல்முறையும் பாதிக்கப்படும்.
எனவே உறங்குவதற்கு 2-3 மணி நேரத்திற்கு முன் எப்போதும் உணவை உண்ண வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே தூங்கும் முன் எந்த வகை உணவை எடுத்துக் கொண்டால், நல்ல தூக்கம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சூடான பால் ஒரு கப் : முதலில், தூங்கும் முன் ஒரு கப் சூடான பால் குடிப்பதை பழக்கமாக கொள்வது சிறந்த பலனைக் கொடுக்கும். பாலில் அதிக அளவு கால்சியம், வைட்டமின்-டி மற்றும் மெலடோனின் இருப்பதால், நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது.
முந்திரி சாப்பிடுங்க : இது தவிர தூங்கும் முன் முந்திரி சாப்பிடலாம். முந்திரி நரம்புகளை தளர்த்த உதவுகிறது. முந்திரியில் கொலஸ்ட்ரால் அதிகம் இல்லை. எனவே சர்க்கரை நோயாளிகள் இரவு உணவில் முந்திரியையும் சேர்த்துக்கொள்ளலாம்.
நல்ல தூக்கம் கொடுக்கும் ஜாதிக்காய் : ஜாதிக்காயை இரவில் சாப்பிடுவதற்கு முன்பும் சாப்பிடலாம். இது நரம்புகளை அமைதிப்படுத்தவும் செரோடோனின் வெளியிடவும் உதவுகிறது. இது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.
சப்பாத்தி அல்லது சாதம் சாப்பிடுங்க : ரொட்டி - அரிசி உணவுகள் எடையை அதிகரிக்கும் என்பதால் இரவில் சாப்பிடக்கூடாது என்று பலர் கூறுகிறார்கள், ஆனால் அப்படி எதுவும் இல்லை. இது உடலில் டிரிப்டோபனை வெளியிட உதவுகிறது மற்றும் நல்ல தூக்கத்தை கொடுக்க உதவுகிறது.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிடுங்க : இரவு உணவில் சர்க்கரை வள்ளிக்கிழங்குகளையும் சேர்த்துக்கொள்ளலாம். இதில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளதால், நரம்புகளை அமைதிப்படுத்தவும், நல்ல தூக்கத்திற்கும் பயன்படுகிறது.