தீர்மானிக்கும் அதிகாரத்தை சுகாதார அதிகாரிகளிடம் வழங்க வேண்டும் - எரான் விக்ரமரத்ன
அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளினால் கொரோனா பரவலுக்கு எதிரான பாதுகாப்பு அரணை முன்கூட்டியே கட்டியெழுப்ப முடியாமல் போயுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
அதனால் இப்போது நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நிலை ற்பஏட்டிருக்கின்றது என்றும் அவர் கூறினார். எனவே இனிமேலாவது என்ன செய்யவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை தொற்று நோய்த்தடுப்பு நிபுணர்கள் மற்றும் சுகாதாரப் பிரிவினரிடம் அரசாங்கம் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முகம் கொடுத்திருக்கும் நெருக்கடி நிலை தொடர்பாக விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.