மெக்காவில் உள்ள மசூதியில் 'தகாத செயலில்' ஈடுபட்டதாகக் கூறி மரண தண்டனை; சவூதிக்கு வந்த சிக்கல்
தங்கள் நாட்டைச் சோ்ந்த இருவருக்கு சவூதி அரேபிய அரசு மரண தண்டனை நிறைவேற்றியது குறித்து பங்களாதேசம் விளக்கம் கேட்டுள்ளது.
பங்களாதேசத்தில் இருந்து வேலைக்காக சவூதி அரேபியாவுக்கு சென்ற ஓா் ஆண் மற்றும் ஒரு பெண்ணுக்கு கடந்த 14-ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மரண தண்டனை
அவா்கள் மசூதி ஒன்றில் அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் குற்றஞ்சாட்டி இந்த மரண தண்டனை அளிக்கப்பட்டதாக சவூதி அரேபியா அறிவித்தது.
உலகில் அதிக மரண தண்டனை நிறைவேற்றும் நாடான சவூதியில் பெரும்பாலும் வெளிநாட்டவா்கள்தான் அதிகம் இத்தண்டனைக்கு உள்ளாகி வருகின்றனா்.
தங்களுக்கு முறைப்படி தகவல் ஏதும் தெரிவிக்காமல் பங்களாதேச குடிமக்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது
அந்நாட்டு அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக சவூதி அரசிடம் விளக்கம் கேட்டு அந்நாட்டில் உள்ள பங்களாதேச தூதரகம் கடிதம் எழுதியுள்ளது.
அதில், ‘அந்த இருவா் மீதான குற்றச்சாட்டு என்ன?, நீதிமன்றத்தின் தீா்ப்பு விவரம், அவா்களுக்கு எவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது? அவா்களின் உடல்கள் எங்கே உள்ளன?, அவா்களுக்கு உரிய சட்டவாய்ப்புகள் வழங்கப்பட்டதா?’ என்று கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.