கொரோனா நோயாளிகளிற்கு பெரும் சேவையாற்றிய மருத்துவ தாதி மரணம்!
மினுவாங்கொட மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளிற்கு பெரும் சேவையாற்றிய மருத்துவ தாதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார்.
வாழ்வா சாவா என்ற நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளை காப்பாற்றுவதில் மருத்துவர்களும் தாதிமார்களும் விலைமதிப்பற்ற சேவையை ஆற்றி வருகின்றனர்.
ஆனால் சுகாதார மருத்துவ பணியாளர்கள் கொரோனாவினால் மரணிப்பது எவ்வளவு துரதிஸ்டவசமானது? இரண்டாவது அலையின் போது மினுவாங்கொடையில் பெருமளவு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டவேளை அப்பகுதியில் கொரோனா சிகிச்சைக்கான வோர்ட் காணப்படவில்லை. மினுவாங்கொடை மருத்துவமனைக்கு மிகவும் அவசியமாகயிருந்த கொரோனா வோர்ட் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது.
சுகாதார அமைச்சு முன்னெடுத்த அந்த திட்டத்தினை முன்னின்று நடைமுறைப்படுத்தியவர்,மினுவாங்கொடை மருத்துவமனையின் மருத்துவதாதி இந்துஅமரசிங்க அவர் மினுவாங்கொட மருத்துவமனையில் கொரோனா வோட்டினை உருவாக்குவதுடன் நின்றுவிடாமல் அந்த வோட்டின் நோயாளிகளை தாய்போல கவனித்தார்.
அவர் தனது 56வயதில் சமீபத்தில் கொரோனாவிற்கு பலியானார். அவர் மூன்று தசாப்தகாலமாக மருத்துவ தாதியாக பணியாற்றியவர்,இரண்டு பிள்ளைகளின் தாயான அவர் தனது இரண்டு பிள்ளைகளின் தாயாக மாத்திரமன்றி பல பிள்ளைகளின் அன்புதாயாக காணப்பட்டார்.
கொரோனா பரவ ஆரம்பித்ததும் அவருக்கு தனிப்பட்ட வாழ்க்கை என்பது இல்லாமல் போனது, அவர் தனது முழு நேரத்தையும் கொரோனா நோயாளிகளிற்காக செலவிட்டார்.
மினுவாங்கொட யட்டியானாவில் உள்ள மருத்துவமனைக்கு நாங்கள் சென்றவேளை அவரது கணவரும் பிள்ளைகளும் கண்ணீரில் காணப்பட்டனர், அவர்களால் அவருக்கு என்ன நடந்தது என்பதை நம்பக்கூட முடியவில்லை கணவர் இதனை எங்களிடம் தெரிவித்தார்.
அவரின் சேவையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை கடந்த ஒரு வருடமாக அவர் தனது நேரத்தை கொவிட் நோயாளிகளிற்காக செலவிட்டார்.
நான் வீட்டிற்கு வந்தவுடன் கொரோனா நோயாளிகள் பற்றி பேசுவேன் அவருக்கு தனது பிள்ளைகளை பராமரிப்பதற்கோ அல்லது அவர்களது வீட்டுப்பாடங்களை கவனிப்பதற்கோ நேரமிருக்கவில்லை. சில நோயாளகள் சில நேரம் வீட்டில் சமைத்த உணவை பெற்றுக்கொண்டார்கள். ஒரு நோயாளி உயிரிழந்தால் அன்றைய தினம் துக்கதினமாக காணப்பட்டது.
சிலநேரம் மதிய உணவிற்கு கொண்டு சென்ற உணவை திருப்பி வீட்டிற்கு கொண்டுவருவார். அவருடன் சேர்ந்த பல பணியாளர்கள் நோயாளிகளை காப்பாற்றுவதற்கு தங்களை அர்ப்பணித்தனர்.
இறுதியில் அவரும் கொரோனாவால் உயிரிழக்கும் நிலையேற்பட்டது. இது இடம்பெறும் என நாங்கள் எண்ணிப்பார்க்கவில்லை,நாங்கள் எதுவும் செய்ய முடியாதவர்களாக உள்ளோம், அவர் தனது கடமையை 100 வீதம் சரியாக செய்தார்,என அவர் தெரிவித்தார்.
எனது சகோதரியின் மரண அறிவித்தலை பார்த்து வீட்டிற்கு வந்த ஒருவர் இந்து இறந்தது தனக்கு தந்தையை பறிகொடுத்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார். இன்னும் நான்கு வருடங்கள் அவர் சேவையாற்றியிருக்க முடியும் என இந்து அமரசிங்கவின் சகோதரி தெரிவித்தார்.
இந்து அமரசிங்க தனது தாதி பயிற்சியை முடித்துக்கொண்ட பின்னர் முதலில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவில் சேவையாற்றினார். அது முப்பது வருடங்களிற்கு முன்னர், அவ்வேளை நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலம் -அவர் யுத்தவீரர்களிற்கு பெரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றினார், அவர்களை நேசித்தார்.
கடந்த வருடம் கடற்படையினர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர், அவர்களிற்கு மினுவாங்கொடையில் சிகிச்சை வழங்கப்பட்டது, அவ்வேளை தனது வீட்டு தோட்டத்திலிருந்து பழங்களை கொண்டுசென்றார். பாண் வத்தாளங்கிழங்கு போன்றவற்றை வீட்டிலிருந்து அவர் எடுத்துச்சென்றார்.
கடந்த ஒரு வருடகாலமாக மினுவாங்கொட வைத்தியசாலையில் கொரோனா நோயாளிகளிற்கு சிகிச்சை அளிக்கும் பிரிவில் பணியாற்றிய அவர் சில வாரத்திற்கு முன்னர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
கொரோனா அறிகுறிகள் மெல்ல மெல்ல அதிகரித்ததால் அவர் கிசிச்சை பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். கடந்த வாரம் கொரோனாதீவிரமடைந்ததை தொடர்ந்து அவர் உயிரிழந்தார் என மினுவாங்கொட மருத்துவமனையின் இயக்குநர் ஜயந்த அபயரட்ண தெரிவித்தார்.