ஹோமாகம பொலிஸ் நிலைய உயிரிழப்பு; 17 பேரிடம் வாக்குமூலம்
ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சந்தேக நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், 8 பொதுமக்கள் மற்றும் 9 பொலிஸ் அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் மேற்கு மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

உயிரிழப்பு தொடர்பில் முழுமையான விசாரணை
கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி இடம்பெற்ற உயிரிழப்பு தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், சம்பவம் தொடர்பான ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட ஹோமாகம பொலிஸ் நிலைய குற்றப்பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அடையாள அணிவகுப்புக்காக எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த சந்தேக நபர் ஒக்டோபர் 24ஆம் திகதி சாலை விபத்தில் காயமடைந்து ஹோமகம மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதுடன், அன்றைய தினம் மாலை அனுமதியின்றி மருத்துவமனையை விட்டு வெளியேறியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.