பதறவைத்த சம்பவம்; பிறந்த சிசுவை கொன்ற திருமணம் ஆகாத 18 வயது பெண்; காதலன் கைது
18 வயதான திருமாணம் ஆகாத இளம் பெண் தான் பெற்ற குழந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளதாவது,
சென்னையை அடுத்த எண்ணூர் தேஜை நகர் பகுதியைச் சேர்ந்த கோகிலா (18) என்ற இளம் பெண், கடந்த அக்டோபர் 24-ஆம் திகதி கடும் வயிற்றுப்போக்கு காரணமாகப் பெரியார் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒன்பது மாத நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், மருத்துவமனையில் இயற்கை உபாதைக்காகச் சென்றபோது திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார்.
பதின்மவயது காதல் - காதலன் கைது
எனினும் குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே எந்தவிதச் சலனமும் இன்றிப் பேச்சுமூச்சின்றி இருப்பதாக செவிலியர்கள் பெண்ணைக் குழந்தையுடன் மருத்துவரிடம் காட்டியுள்ளனர்.
உடனடியாக மருத்துவர்கள் அவர்களை மேல் சிகிச்சைக்காக அரசு ஆர்.எஸ்.ஆர். மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதி செய்தனர்.
இந் நிலையில் மர்மமான முறையில் பச்சிளம் குழந்தை உயிரிழந்தது குறித்துத் திருவொற்றியூர் காவல்துறையினர் சந்தேக மரண் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை முன்னெடுத்தனர்.
குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, நெஞ்சைப் பதற வைக்கும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.
பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, அந்தப் பெண் குழந்தையின் கழுத்து நெறிக்கப்பட்டிருப்பதும், குழந்தையின் தலையில் சுவரில் இடித்தால் ஏற்படும் அளவிலான பலத்த காயங்கள் இருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து, கோகிலாவிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டபோது, கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சந்தோஷ் என்பவருடன் தனக்குத் நெருக்கமான பழக்கம் இருந்ததாகவும், அதன் விளைவாகவே தான் கர்ப்பமடைந்ததாகவும் கூறினார்.
அதுமட்டுமல்லாது தன் வீட்டாருக்குத் தான் ஒன்பது மாத கர்ப்பிணியாக இருப்பது பிரசவ வலி வரும் வரை தெரியாது என்றும், கடுமையான மனக்குழப்பம் மற்றும் அச்சம் காரணமாகவே தான் இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்தச் சம்பவத்திற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படும் காதலன் சந்தோஷிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
கோகிலா சிறுமியாக (17 வயது) இருக்கும் போதிலிருந்தே அவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளதால், போக்சோ சட்டத்தின் கீழ் சந்தோஷ் மீது காவல்துறையினர் கடுமையான வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருமணம் மற்றும் குடும்பத்தினருக்குப் பயந்து பச்சிளம் உயிரைக் காவு வாங்கிய இந்தச் செயலில் தொடர்புடைய இளம் தாய் கோகிலாவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதுடன் காதலனையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.