2026ஆம் ஆண்டு உயர்தர பரீட்சார்திகளுக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (24) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
விண்ணப்பங்களை தற்போது ஒன்லைன் ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும். இன்று நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் இதற்கான இணையத்தளம் செயலிழக்கப்படும் என்பதால், அதன் பின்னர் விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பம் கோரலுக்கான காலப்பகுதி எக்காரணம் கொண்டும் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
பெண்களின் தொப்புளின் மீது ரொட்டி உண்ணும் போட்டி ; அருவருக்கத்தக்க விளையாட்டால் வெடித்த பெரும் சர்ச்சை!
அதேவேளை இதுவரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.