கல்முனை கடற்கரை பிரதேசத்தில் இறந்த நிலையில் டொல்பின் மீன்
அம்பாறை கல்முனை கடற்கரை பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
இன்று (19) கரையொதுங்கிய குறித்த மீனை அப்பகுதி பொதுமக்கள் பார்வையிட்டதுடன் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மீன் சுமார் 3 முதல் 4 அடி வரையான நீளம் கொண்டதுடன் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள அடை மழை வெள்ளப்பெருக்கு கடல் கொந்தளிப்பினால் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர் .
இது தவிர ஏற்கனவே அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பெரியநீலாவணை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் கடலாமைகள் டொல்பின் மீனினம் என பலவகை கடல்வாழ் உயிரினங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரை ஒதுங்கி இருந்தது.
இதே வேளை முகத்துவாரம் வெட்டப்பட்டுள்ளதனால் கடலை நோக்கி ஆற்று வாழைகள் சல்பீனியாக்கள் சென்று கடற்கரையில் தேங்கி காணப்படுகின்றது.