ஒலுவில் கடல் அலையில் காணாமல்போன மாணவனின் சடலம்
அம்பாறை- நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒலுவில் பகுதியில் கடல் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்டு காணாமல் போன மாணவர்களில் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை (16) கடலோரங்களில் விளையாட்டில் ஈடுபட்ட 8 மாணவர்களில் இருவர் கடல் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்டனர்.
விளையாடிக் கொண்டிருந்தபோது அனர்த்தம்
இந்நிலையில், கடல் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட சூர்தின் முஹம்மட் முன்சிப் என்ற மாணவனின் உடல் இன்று சனிக்கிழமை (17) காலை ஒலுவில் பகுதியில் கரையோதுங்கியுள்ளது.
இந்நிலையில் காணாமல்போன மற்றுமொரு மாணவன் தொடர்பான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மாளிகைக்காடு - சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களே கடலில் புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.