தாயின் சடலத்தை வைத்து 7 நாட்கள் மகள்கள் செய்த காரியம்
திருச்சியில் உயிரிழந்த தாயின் சடலத்தை வைத்து ஏழு நாட்கள் ஜெபம் செய்து வந்த மகள்களிடமிருந்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
மணப்பாறை அருகே சொக்கம்பட்டியை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ஆசிரியை மேரி. இவருக்கு ஜெசிந்தா(43) மற்றும் ஜெயந்தி(40) என திருமணமாகாத இரு மகள்கள் உள்ளனர். ஊருக்குள் வெளியில் இவர்கள் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் மேரி கடந்த சில நாடுகளாக உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். அவரைப் பார்ப்பதற்காக அவரது உறவினர் ஒருவர் வீட்டுக்கு வந்துள்ளார்.
அந்த சமயத்தில் மேரி இறந்த நிலையில் இருந்துள்ளார். அருகே அவரது மகள்கள் இருவரும் பைபிளை வைத்து ஜெபம் செய்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பிறகு அந்த உறவினர் இருவரிடமும் சென்று உடலை அடக்கம் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனைக்கேட்டு மகள்கள் இருவரும் உறவினரை திட்டி வெளியேற்றியுள்ளனர்.
இந்த சமத்துவம் குறித்து உறவினர் ஊர்மக்களிடம் தகவல் தெரிவிக்க,அவர்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். அங்கு மேரி வீட்டுக்கதவை நீண்ட நேரமாக தட்டியும் திறக்கவில்லை. பின்பு சில நொடிகளில் மேரி மகள்களில் ஒருவர் கதவை திறந்துள்ளார். அந்த சமயத்தில் பொலிஸார் உள்ளே பாதி அழுகிய நிலையில் இருந்த மேரியின் உடலைக் கண்டு அதிர்ச்சிதடைந்துள்ளார்.
பின்பு உடலை மீட்க பொலிஸார் முயன்றபோது மகள்கள் இருவரும் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து பொலிஸார் மகள்கள் இருவரிடமும் தாய் மேரியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்று உயிரைக்காப்பாற்றலாம் என பொய் கூறி சமாதானப்படுத்த முயற்சித்தும் அது பலனளிக்காமல் போனது.
பின்னர் சமத்துவ இடத்திற்கு வருகை தந்த மணப்பாறை தாசில்தார் சேக்கிழார் 108 ஆம்புலன்ஸ் மருத்துவக்குழுவை வரவழைத்து பரிசோதனை நடத்தியதில் மேரி உயிரிழந்தது உறுதியானது. பிறகு அவரது உடலை மணப்பாறை வைத்திய சாலைக்கு கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து பரிசோதனை நடத்தப்பட்டதில் மேரி இறந்து 7 நாட்கள் ஆகி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதனை மறுத்த மகள்கள் தாய் உயிருடன் வந்துவிடுவார் என மீண்டும் வாக்குவாதம் செய்துள்ளனர். இரவு 9 மணியளவில் தொடங்கி சுமார் 4 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மகள்களிடம் இருந்து உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
தாயின் சடலத்தை வைத்து 7 நாட்கள் ஜெபம் நடத்திய மகள்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.