கண்முன்னே பலியான மகள்; பதறிதுடித்த தந்தை
தந்தையுடன் மோட்டாசைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த மாணவி விபதில் ,உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (16) காலை, கண்டி வில்லியம் கோபல்லவ மாவத்தை மீன் சந்தைக்கு முன்பாக கெட்டம்பே திசையிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகளும் வாகனத்துடன் மோதி கீழே விழுந்துள்ளனர். இதன்போது மற்றொரு வாகனத்தில் மகளின் தலை சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் சிக்கிய 17 வயதுடைய மாணவி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் அவர் கண்டி கெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற தந்தைக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.