பேரீச்சம்பழத்தில் இத்தனை நன்மையா?
இரத்த விருத்தி மட்டுமல்ல, சர்க்கரை அளவை பராமரிக்கும். இதில் கல்சியம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும், இரும்புச் சத்து, வைட்டமின் A, B, B2, B5 மற்றும் வைட்டமின் E சத்துக்களும் நிறைந்து காணப்படுவதாக ஆயுர்வேத யுனானி சித்த மருத்துவத்தில் உறுதி செய்கிறது.
குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்றவை பேரீச்சம் பழத்தில் அதிகம் இருக்கின்றன.
சக்கரை அளவைக் குறைத்தல்
அதிலும், கோடைக்காலத்தை விட, குளிர் பருவத்தில் பேரீச்சம்பழத்தை உண்பது மிகவும் நல்லது.
அதற்கு காரணம், சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம் பேரீச்சம்பழம் என்பது தான்.
பழமாக இருக்கும்போது பேரீச்சையில் இருக்கும் இரும்புச்சத்து, கல்சியம், மாங்கனீசு, தாமிரம், மெக்னீசியம், விட்டமின் A, B, B2, B5 மற்றும் விட்டமின் E சத்துக்கள், துளியும் குறையாமல் உலர் பேரிட்சையிலும் கிடைக்கிறது.
இதனாலேயே இரத்த விருத்தியையும் சக்கரையின் அளவையும் பராமரிக்க உதவுகின்றது.
பேரீட்ச்சம்பழத்தின் நன்மை
மேலும் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
அத்துடன் நல்ல கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவதோடு எலும்பு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.