2030 உலகக்கிண்ணக் கால்பந்து போட்டி திகதி அறிவிப்பு
2030ஆம் ஆண்டிற்கான 24ஆவது உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகள் மொராக்கோ, போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.
இந் நிலையில், இப்போட்டிகள் 2030 ஜூன் 8 முதல் ஜூலை 21 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கால்பந்து போட்டி தொடங்கி 100 ஆண்டுகள்
உலகக் கிண்ணக் கால்பந்து போட்டி தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாக, 1930-ல் முதல் தொடர் நடைபெற்ற உருகுவே, மற்றும் அண்டை நாடுகளான ஆர்ஜென்டினா, பராகுவே ஆகிய நாடுகளில் தலா ஒரு சிறப்புப் போட்டி நடத்தப்படவுள்ளது.
இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றிலேயே முதல் முறையாக போட்டிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட கண்டங்களில் நடைபெறுகின்றன.
அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடந்து முடிந்த 23ஆவது உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில், ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டினாவை வீழ்த்தி 2ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.