அவுஸ்திரேலிய பெண் விவகாரத்தில் தனுஷ்கா சிக்கியது எப்படி? வெளியான புதிய தகவல்கள்
அவுஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்கா குணதிலகா பாலியல் வழக்கில் எவ்வாறு சிக்கிக் கொண்டார் என்பது தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி தனுஷ்கா குணதிலகாவுக்கும் அவுஸ்ரேலியா பெண்ணுக்கும் இடையில் படுக்கை அறையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்ரேலியா பாலியல் குற்றங்கள் தடுப்பு பிரிவு துணை பொலிஸ் அதிகாரி ஜேன் டோஹர்ட்டி கூறியதாக இலங்கையில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை ஒன்று இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
நேரில் சந்திப்பு
அதன்படி, குணதிலகாவும், 29 வயது குறித்த பெண்ணும் ஒரு 'டேட்டிங் ஆப்' மூலமாக அறிமுகமாகி உள்ளனர். சில வாரங்களாக இருவரும் அதில் உரையாடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2 ஆம் திகதி இரவு, அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஒரு பாரில் இருவரும் முதல் முறையாக நேரில் சந்தித்துக்கொண்டனர்.
இந்த சந்திப்பின்போது, சிட்னியின் ரோஸ் பே பகுதியில் உள்ள இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்று உறவில் ஈடுபடுவது என்றும் இருவரும் ஒருமனதாக முடிவு செய்தனர்.
இதனையடுத்து பெண்னின் வீட்டிற்கு சென்று நிலையில் படுக்கை அறையில் இருவருக்கும் இடையே திடீரென மோதல் வெடித்தது. ஆணுறை அணிய தனுஷ்கா குணதிலகா மறுத்ததால் வாக்குவாதம் எழுந்ததாகவும் கூறப்படுகின்றது.
ஒருகட்டத்தில், தனுஷ்கா குணதிலகா அப்பெண்னை பலாத்காரம் செய்ததாகவும் அதைத்தொடர்ந்து, இளம்பெண்ணின் முறைப்பாட்டின் அடிப்படையில் குணதிலகா அவர் தங்கி இருந்த ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.