சர்க்கரை அளவை திடீரென எகிறவைக்கும் ஆபத்தான உணவுகள்!
பொதுவாக ஒரு ஆரோக்கியமான மனிதனின் உணவு டயட்டுக்கும் ,ஒரு நீரிழிவு நோயாளியின் உணவு டயட்டுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு .
ஒரு சுகர் பேஷன்டுக்கென்று மருத்துவர்கள் சில இனிப்பில்லாத ,சர்க்கரை அளவை உயர்த்தாத உணவு பட்டியலை கூறியுள்ளார்கள்.
அந்த உணவு பட்டியலை பின்பற்றினாலே போதும் சுகரை சுகர் கட்டுப்பாட்டில் வைக்கலாம் .
தவிர்க்க வேண்டிய உணவுகள்
1.சிலர் காலை உணவாக செரில்களை எடுத்து கொள்வர் .சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த செரில்கள் மிகவும் மோசமன உணவுஎன்பதால் அவர்கள் இதை அறவே தவிர்ப்பதே நல்லது.
2..சில சுகர் பேஷண்டுகள் பழ ஜூஸ் குடிப்பர் .சர்க்கரை நோயாளிகளுக்கு பழச்சாறுகள் முற்றிலும் மோசமான பானம். இந்த வகை பழச்சாறுகள் சுகர் பேஷன்டின் இரத்த சர்க்கரை அளவை சட்டென்று உயர்த்திவிடும். எனவே அவர்கள் இவற்றை தவிர்ப்பது நல்லது.
3.பொதுவாக பலருக்கும் யோகர்ட் ஆரோக்கியமான உணவு . ஆனால் அவை இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும் என்பதால் சுகர் பேஷண்டுகள் தவிர்க்கலாம்ஆனால் சர்க்கரை நோயாளிகள் யோகர்ட் சாப்பிட விரும்பினால், வெறும் யோகர்ட்டில் சிறிது பழங்களை சேர்த்து உண்பது நலம்.
4.பேன்கேக்குகள் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் மோசமான மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு உணவாகும் .