மழைக்காலத்தில் வெங்காயத்தில் ஒளிந்திருக்கும் ஆபத்து!
நாம் சலையலில் அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயம் சுவைக்காக மட்டுமல்ல, நம் ஆரோக்கியத்தைக் காப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
குறிப்பாக, ஈரமான சூழலில், வெங்காயத்தின் மேல் தோலின் அடியிலோ அல்லது உள் அடுக்கிலோ கருமையான புள்ளிகளோ அல்லது கோடுகளோ தென்படுவதுண்டு.

இது அஸ்பெர்கிலஸ் நைகர் போன்ற ஒரு வகைப் பூஞ்சையின் வளர்ச்சியைக் குறிக்கிறது.
இந்தப் பூஞ்சையானது, குறிப்பிட்ட நச்சுத்தன்மையை வெளியிடுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
பூஞ்சை படிந்த வெங்காயம்
பூஞ்சை படிந்த வெங்காயத்தை முறையாகச் சுத்தப்படுத்தாமல் பயன்படுத்தும்போதும், அதன் வித்துக்கள் உடலுக்குள் செல்லும் வாய்ப்பு உள்ளது.
இந்த பூஞ்சை வித்துக்கள் நுரையீரலைப் பாதிக்கக்கூடிய அபாயம் உள்ளது. ஏற்கனவே ஆஸ்துமா அல்லது ஒவ்வாமை போன்ற சுவாசப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஆபத்தாக முடியலாம்.

தலைவலி, குமட்டல், வயிற்றுப்போக்கு போன்ற பொதுவான உடல்நலப் பாதிப்புகளும் இதனால் ஏற்படலாம்.
கிருமித் தொற்று -தடுக்க வழிகள்
வெங்காயத்தைப் பயன்படுத்துவதற்கு முன் முதலில் அதன் மேலிருக்கும் காய்ந்த தோலை முழுவதுமாக நீக்கிவிட வேண்டும்.
பாத்திரத்தில் சிறிது கல்லுப்பை எடுத்து, அந்த வெங்காயத்தின் மீது தூவி, நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும்.
கல்லுப்பு வெங்காயத்தில் இருக்கும் நுண்ணிய கிருமிகளையும், மேலடுக்குகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் பூஞ்சை வித்துக்களையும் நீக்குவதற்கு உதவுகிறது.

வெங்காயம் அது வெட்டப்பட்டவுடன் காற்றிலுள்ள கிருமிகளையும், பாக்டீரியாக்களையும் மிக வேகமாக ஈர்க்கும் தன்மை கொண்டது. வெங்காயம் வெட்டப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் அதன் மேற்பரப்பில் அதிகப்படியான கிருமிகள் குவியும் அபாயம் உள்ளது.
எனவே வெட்டிய வெங்காயம் எந்த வகையிலும் வெளியிலுள்ள கிருமிகளை ஈர்க்காதபடி உறுதி செய்வது அவசியம். சமைக்கத் தேவைப்படும் போது மட்டுமே வெங்காயத்தை வெட்டி உடனடியாகப் பயன்படுத்துவதே சிறந்தது. நன்மைகளைப் பாதுகாப்பாகப் பெற முடியும்.