நீண்ட நேரம் வரிசையில் நிற்பதால் மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!
மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும்போது, அவர்களுக்கு கடுமையான மன அழுத்தம் ஏற்படும் என உளவியல் வைத்திய நிபுணர் ரூமி ரூபன் எச்சரித்துள்ளார்.
இந்த மன அழுத்தம் காரணமாக, உடல் ரீதியான பாதிப்புகளும் ஏற்படும் எனவும் அவர் கூறினார். அத்துடன் வரிசைகளில் காத்திருக்கும்போது, உள மற்றும் உடல் ரீதியாக பாதிப்புகள் ஏற்படுகின்றன.
பல மணி நேரங்களாக வரிசைகளில் காத்திருக்கும்போது, மன அழுத்தம் ஏற்படுகின்றது. மன அழுத்தம் ஏற்படும்போது, உடல் ரீதியான பாதிப்புகள் அதிகரிக்கின்றதாகவும் உளவியல் வைத்திய நிபுணர் ரூமி ரூபன் கூறினார்.
மேலும் , வரிசைகளில் காத்திருக்கும்போது, சுகாதாரம் உள்ளிட்ட விடயங்கள் கருத்திற்கொள்ளப்படாமையும் மன அழுத்தத்திற்கான காரணமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.