இரண்டு டோஸ்களை போட்டுக்கொண்ட நடிகைக்கு மீண்டும் ஏற்பட்ட ஆபத்து!
நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் தனக்கு இரண்டாவது முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பாதிவிட்டுள்ளார்.
விரட்டு என்ற தமிழ் படம் மூலம் அறிமுகமானவர்தான் பிரக்யா ஜெய்ஸ்வால். அவர் தற்போது தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் நடித்து வருகிறார். தற்போது பாலகிருஷ்ணா ஜோடியாக ஒரு படத்தில் நடித்து முடித்திருப்பதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் தெரிவித்தது, நான் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை போட்டுக்கொண்டே பின்னரும் தற்போது எனக்கு இரண்டாவது முறை கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் என்னை சந்திக்க வந்த அனைவரும் 10 நாட்களுக்கு தயவு செயது போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கோட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் தனிமைப்படுத்துதலில் இருக்கும் காணொளியை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.