தினமும் காலையில் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
பாதாம் நார்ச்சத்து, ஆரோக்கிய கொழுப்பு கொண்ட ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரதம் என பல ஊட்டச்சத்துக்கள் கொண்டவை. அற்புதமான சத்துக்களை கொண்டுள்ள பாதாமை அப்படியே சாப்பிடாமல் அதை 8 - 10 மணி நேரம் வரை ஊறவைத்து தோல் உரித்து சாப்பிட வேண்டும். இந்த பாதாமை ஏன் தினமும் சாப்பிட வேண்டும் என நாம் இங்கு பார்ப்போம்.
செரிமானத்தை மேம்படுத்தும்
தினசரி காலை நேரத்தில் பாதாம் சாப்பிடுவது அன்றைய நாளில் எடுத்துகொள்ளும் உணவை செரிமானமாக்க உதவுகிறது. பாதாம் கடினமானது என்றாலும் ஊறவைத்த பாதாம் கடினமான பகுதிகளை உடைத்து, உடல் எளிதில் உறிஞ்சும் வகையில் செய்துவிடும். இதனால் செரிமானத்தால் வாயு மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளை தடுக்க இவை உதவும். இது நார்ச்சத்து நிறைந்தது. செரிமான மண்டலத்தில் உணவை சீராக நகர்த்த இவைஉதவுகிறது. காலை நேரத்தில் பாதாம் சாப்பிடுவது அன்றைய தினத்தில் செரிமான கோளாறை தடுக்க செய்யும்.
நீரிழிவை கட்டுப்படுத்த உதவும்
பாதாம் ஊறவைத்து சாப்பிடும் போது அது கிளைசெமிக் கட்டுப்பாட்டை மேம்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகள் காலை நேரத்தில் பாதாம் எடுத்துகொள்ளும் போது அது இரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது. இளவயதில் இருந்து எடுக்கும் போது இது சர்க்கரை நோயை வரவிடாமல் தடுக்கிறது. இது இரத்த சர்க்கரை அளவில் எவ்வித தாக்கமும் ஏற்படுத்தாது. பாதாம் ஊறவைத்து சாப்பிடுவதை நீரிழிவு நோயாளிகள் மற்ற உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களுடன் சேர்த்து வரும் போது இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுவதில் சிறிது உதவும்
இதயத்தை பாதுகாக்கும்
காலை நேரத்தில் வெறும் வயிற்றில் ஊறவைத்து பாதாம் சாப்பிடும் போது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பாதாமில் இருக்கும் பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை இதய ஆரோக்கியத்தில் இதய துடிப்புக்கு சிறந்தது. மேலும் ஊறவைத்த பாதாம் கெட்ட எல்டிஎல் கொழுப்பை குறைத்து ஹெச்டிஎல் என்னும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது
எடை இழப்புக்கு உதவும்
காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பாதாம் சாப்பிடுவது எடை இழப்பையும் தூண்டும். ஊறவைத்த பாதாமில் லிபேஸ் என்னும் நொதிகள் வெளியிடப்படுகிறது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. உடலில் இருக்கும் கெட்டெ கொழுப்பை குறைப்பதால் இறுதியில் எடை இழப்பு உண்டாகிறது. காலையில் வெறும் வயிற்றில் பாதாம் சாப்பிடுவது நார்ச்சத்து அளிப்பதால் வயிறு பசியில்லாமல் திருப்தியுடன் இருக்கும். உடல் எடையை குறைக்க விரும்பினால் தினமும் ஊறவைத்த பாதாமை சாப்பிடலாம்.
மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்
பாதாமில் இருக்கும் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 போன்றவை மூளைக்கு நல்லது. இதனால் நினைவாற்றல் மற்றும் அல்சைமர் நோய் தடுக்கப்படுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஈ மூளைக்கு நல்லது. இதை ஊறவைத்து எடுப்பதன் மூலம் வைட்டமின் ஈ கிடைக்கும். இது உடலால் எளிதில் உறிஞ்சப்படுகிறது. இது ஜீரணிக்க எளிதாகவும் இருக்கும். தினசரி காலையில் ஊறவைத்த பாதாம் 5 சாப்பிடுவது நாளடைவில் முளை சுறுசுறுப்பாக வைத்திருப்பதோடு வயதான காலத்திலும் நினைவாற்றலை இழக்காமல் பார்த்துகொள்ளும்.