கவலையை ஏற்படுத்தும் புறக்கோட்டை பஸ் நிலையத்தின் தற்போதய நிலை ; மக்களுக்கு கடும் எச்சரிக்கை

Colombo Sri Lanka Sri Lankan Peoples
By Vironika Apr 10, 2026 07:41 AM GMT
Report

புதிதாக திறக்கப்பட்ட  புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தில் பல பகுதிகளில் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதுடன், பெண்கள் கழிவறைகளில் பொருத்தப்பட்டிருந்த நீர்க்குழாய்கள் கழற்றி செல்லப்பட்டுள்ளன.

இந்நிலையில் புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராகத் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

கவலையை ஏற்படுத்தும் புறக்கோட்டை பஸ் நிலையத்தின் தற்போதய நிலை ; மக்களுக்கு கடும் எச்சரிக்கை | Current Status Pettah Central Bus Stand

நேரடி கண்காணிப்பு 

இன்று  (10) காலை பஸ் நிலையத்திற்கு நேரடி கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பஸ் நிலையத்தின் சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவது ஒரு திட்டமிட்ட குழுவின் செயல் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இதனைத் தடுக்கக் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

கவலையை ஏற்படுத்தும் புறக்கோட்டை பஸ் நிலையத்தின் தற்போதய நிலை ; மக்களுக்கு கடும் எச்சரிக்கை | Current Status Pettah Central Bus Stand

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், குறிப்பாகப் பெண்கள் கழிவறைகளில் பொருத்தப்பட்டிருந்த நீர்க்குழாய்கள் முதல் நாள் திருடப்பட்டிருந்தன. அவை மீண்டும் பொருத்தப்பட்ட நிலையில், நேற்று (09) இரவும் இரண்டாவது முறையாக அவை கழற்றிச் செல்லப்பட்டுள்ளன.

கவலையை ஏற்படுத்தும் புறக்கோட்டை பஸ் நிலையத்தின் தற்போதய நிலை ; மக்களுக்கு கடும் எச்சரிக்கை | Current Status Pettah Central Bus Stand

இது அறியாமையினால் செய்யப்படும் செயலல்ல, மாறாகத் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் ஒரு சதி முயற்சி. அரசியல் ரீதியாகப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் பொதுமக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த இன்று விசேட பாதுகாப்பு கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளது. அடுத்த மூன்று மாத காலத்திற்கு பஸ் நிலையத்தின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக இலங்கை விமானப்படையினர் ஒத்துழைப்பு வழங்க இணங்கியுள்ளனர்

ஜன நாயகன் படக்குழு அதிர்ச்சி; இணையத்தில் முழு படமும் வெளியீடு!

ஜன நாயகன் படக்குழு அதிர்ச்சி; இணையத்தில் முழு படமும் வெளியீடு!

தற்போது அங்குள்ள CCTVகெமராக்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்பதால், கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த மேலதிக கெமராக்களைப் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சமூக வலைத்தளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும் அவதூறுப் பிரச்சாரங்கள் ஒருபுறமிருக்க, பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ள பிரதி அமைச்சர், சட்டத்தை மீறுவோருக்கு எதிராகக் கடுமையான தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர் மரணம்; மாணவி கழிவறைக்கு சென்றபோது தகராறு; பொலிஸார் திடுக்கிடும் தகவல்!

பல்கலைக்கழக மாணவர் மரணம்; மாணவி கழிவறைக்கு சென்றபோது தகராறு; பொலிஸார் திடுக்கிடும் தகவல்!

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US