ஊரடங்கு சட்டம் குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு!
நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அமெரிக்க பிரஜைகளிற்கு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க தூதரகத்தின் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கை அரசாங்கம் செப்டம்பர் 21ஆம் இரவு 10 மணிமுதல் செப்டம்பர் 22 அதிகாலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தியுள்ளது.
ஊரடங்கு குறித்த மேலதிக அறிவிப்புகளிற்காக உள்ளுர் ஊடகங்களையும், அரசின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களையும் தொடர்ந்து கவனித்து வருங்கள்.
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் அனைத்து அமெரிக்க பிரஜைகளையும்,மேலதிக தகவல்கள் பாதுகாப்பு எச்சரிக்கைகளிற்காக ஸ்டெப்பில் Smart Traveler Enrollment Program (STEP) பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்வதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.