இலங்கையில் இரக்கமின்றி தந்தை ஒருவர் செய்த கொடூரம்!
ஹட்டன்- குடாகம பிரதேசத்தில் இரக்கமின்றி சிறுவர்கள் இருவர் மீது மிளகாய்தூள் பூசி துன்புறுத்திய குற்றச்சாட்டில் சிறுவர்களின் தந்தை ஹட்டன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
6 வயதுடைய சிறுவனும் அச்சிறுவனின் 7 வயது சிறுமியுமே, இவ்வாறு அவர்களது தந்தையால் துன்புறுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களது தாயும் அருகிலிருந்துள்ளார். சிறுவர்களை நிர்வாணமாக்கி, அவர்களது முகத்திலும் உடலிலும் மிளகாய்த்தூளைப் பூசி, அவர்களது வீட்டுக்கு முன்பாகவுள்ள மரத்தில் கட்டி வைத்தமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவர்கள் இருவரும் விறகுக் கட்டு ஒன்றை திருடியதாகவும் அதற்கே இவ்வாறு தண்டனை வழங்கிழயதாகவும் தந்தை பொலிஸில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான சிறுவர்கள் இருவரும் சிகிச்சைக்காக கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை இந்த சம்பவம் இடம்பெறுகையில் பிள்லைகளின் தாயும் கூடவே இருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.