முக்கியமான செய்தி வரவிருக்கிறது! ஆவலுடன் காத்திருக்கும் மகன்
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியல் ரீதியிலும் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்றுவரும் இந்த நேரத்தில் நாடாளுமன்றிலும் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் நாடாளுமன்றில் நேற்றையதினம் (05-05-2022) இடம்பெற்ற பிரதி சபாநாயகர் பதவிக்கான வாக்கெடுப்பில் அரச தரப்பு வெற்றி பெற்றது.
இந்த நிலையில் நேற்றையதினம் இடம்பெற்ற பிரதி சபாநாயகர் வாக்கெடுப்பில் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து இன்று மாலை (06-05-2022) மீண்டும் இராஜினாமா செய்துள்ளார்.
இவ்வாறான நிலையில் தற்போது ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவை சந்திப்பு தற்போது இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறான நிலையில் இன்று பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்வார் என பல்வேறு தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.
இதேவேளை சற்றுமுன் முகநூலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகனான ரோகித ராஜபக்ஷ, (Rakhitha Rajapakse) முக்கியமான செய்தி வரவிருக்கின்றது என பதிவிட்டுள்ளார்.
