விவசாயிகளுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்ட விவசாய அமைச்சின் பேச்சாளர்!
அரசாங்க வங்கியொன்றில் வைப்பிலிடப்பட்ட 300 மில்லியன் ரூபாய் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு பணம் வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்,விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபையினால் வைப்பிலிடப்பட்ட பணமே தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வங்கிக்கு சந்தைப்படுத்தல் கடன் தவணை செலுத்த வேண்டியுள்ள நிலையிலேயே வங்கி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு நெல்லை கொள்வனவு செய்வதை தடுக்கும் நோக்கில் நிர்ணய விலைக்கு நெல் கொள்வனவு செய்ய சபை தீர்மானித்தது.
இந்த நிலையில், பணப் பிரச்சினை காரணமாக கொள்வனவில் பிரச்சினை ஏற்படக் கூடும் என்று பேச்சாளர் தெரிவித்துள்ளார்.