கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வா சகோதரர் உட்பட இருவர் மீது தாக்குதல்
இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் உட்பட இருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் நேற்று (10) இரவு இரத்மலானையில் உள்ள அவர்களின் வீட்டிற்கு அருகில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
களுபோவில வைத்தியசாலையில் அனுமதி
பாதாள உலகத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ” இரத்மலானை சுத்தா” என்ற நபர், மேலும் பலருடன் இணைந்து இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த இருவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தெஹிவளை கல்கிஸ்ஸ நகர சபையின் பொதுஜன பெரமுனவின் மாநகர சபை உறுப்பினராக இருந்த தனஞ்ஜய டி சில்வா மற்றும் சவித்ரா சில்வா ஆகியோரின் தந்தையான ரஞ்சன் டி சில்வா 2018 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.