மோடி பிறந்த நாளில் அசத்தல் போட்டி! 8.5 லட்சம் பரிசுத் தொகை அறிவிப்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் நாளை (செப்டெம்பர் 17-ம் திகதி) கொண்டாடப்படுகிறது.
நாளை இடம்பெறவுள்ள மோடியின் பிறந்தநாளையொட்டி டெல்லி கன்னாட் பிளேஸில் அமைந்துள்ள ஆர்டார் 2.0 என்கிற உணவகத்தில் 56 இன்ச் மோடி ஜி தாலி என்கிற பெயரில் உணவுப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
8.5 லட்சம் பரிசு
இந்த போட்டியில் 56 விதமான உணவு வகைகளைக் கொண்ட பிரத்யேக உணவு தட்டு வழங்கப்படுகிறது. இந்த உணவை 40 நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு 8.5 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து உணவக உரிமையாளர் சுமித் கல்ரா பேசியதாவது, பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் நம் நாட்டின் பெருமைக்குரியவர்.
அவருடைய பிறந்தநாளில் தனித்துவமான ஒன்றை அவருக்குப் பரிசளிக்க விரும்புகிறோம். அதனால்தான் இந்த பிரமாண்ட தாலியை வெளியிட முடிவு செய்ததாக கூறிய அவர் அதற்கு 56 இன்ச் மோடி ஜி தாலி என்று பெயரிட்டோம் என தெரிவித்தார்.
இதனுடன், நாங்கள் அவருக்கு இந்த தட்டை பரிசளிக்க விரும்புகிறோம், அவர் இங்கு வந்து சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் பாதுகாப்பு காரணங்களால் இதை செய்ய முடியாது.
பரிசுகளை வெல்லும் வாய்ப்பு
எனவே அவரை மிகவும் நேசிக்கும் அவரது ரசிகர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். இந்த தட்டில் வந்து மகிழுங்கள். இந்த சிறப்பு தாலி வாடிக்கையாளர்களுக்கு பரிசுகளை வெல்லும் வாய்ப்பையும் அளிக்கும்.
இதற்காக வெகுமதியை வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளோம். அதன்படி யாராவது 40 நிமிடங்களில் இந்த பிளேட்டை சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ரூ.8.5 லட்சம் பரிசாக வழங்குகிறோம்.
மேலும், செப்டெம்பர் 17 முதல் 26 வரை எங்களிடம் இந்த உணவை சாப்பிடுபவர்கள், அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் கேதார்நாத்தை தரிசிக்க டிக்கெட் பெறுவார்கள் எனவும் தெரிவித்த உணவக உரிமையாளர், பிரதமர் மோடிக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் இதுவும் ஒன்று அதனால் தான் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறினார்.