விபத்துக்குள்ளான உழவு இயந்திரம்: கவலைக்கிடமான நிலையில் சாரதி
பெருந்தோட்டமொன்றிற்கு உர மூடைகளை (பசளை) ஏற்றிச் சென்று கொண்டிருந்த உழவு இயந்திரம் பாதையை விட்டு விலகி, குடை சாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (13-08-2021) மடுல்சீமைப் பகுதியில் விராலிபத்தனை பெருந்தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் உழவு இயந்திர சாரதி உள்ளிட்ட இரு தொழிலாளர்கள் உட்பட மூவர் படுகாயமைந்துள்ளனர். காயமடைந்த மூவரும், மெட்டிகாதன்னை பிரதேச அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாரதியின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது. இவரை பசறை அரசினர் மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனர்.
விபத்திற்குள்ளான உழவு இயந்திரம் 26 உரமூடைகளை விராலிபத்தனை பெருந்தோட்டத்தில் 89 ஆவது இலக்க தேயிலை மலைக்கு கொண்டுசென்ற போதே, இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து குறித்து, மடுல்சீமைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.