தங்காலை போதைப்பொருள் விவகாரம் ; சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தங்காலை சீனிமோதர பகுதியில் மூன்று லொறிகளில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை, தடுத்து வைத்து விசாரிக்க தங்காலை நீதவான் நீதிமன்றம் பொலிசாருக்கு அனுமதி அளித்துள்ளது.
போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு லொறிகளின் உரிமையாளர்கள் இருவர் மற்றும், வைத்தியசாலையில் உயிரிழந்த உனகுருவே துசித்தவின் மகன் ஆகியோர், நேற்று (24) தங்காலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதிமன்ற உத்தரவு
இதன் போது, சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க பொலிசார் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்த நிலையில், அவர்களை 29ஆம் திகதி வரை காவலில் எடுத்து விசாரிக்க நீதவான் உத்தரவிட்டார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட லொறி ஒன்றின் உரிமையாளரையும் அதன் சாரதியையும், எதிர்வரும் 29ஆம் திகதி வரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம், நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.