பிக்குவையும் பெண்களையும் தொட்ட நபர்கள் தொடர்பில், நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நவகமுவ, பொமிரிய ராஸ்ஸபான பிரதேசத்திலுள்ள விஹாரை ஒன்றின் அறையில் பௌத்த தேரருடன் காணப்பட்டதாகக் கூறப்படும் யுவதி மற்றும் அவரது தாய் ஆகியோரை தாக்கிய குற்றச்சாட்டில் 8 2பேர் கைதாகியிருந்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல பதில் நீதிவான் ஹேமந்த வெத்தசிங்க நேற்று சனிக்கிழமை (08) உத்தரவிட்டார்.
வைரலான காணொளி
சந்தேக நபர்கள் 8 பேரையும் அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், முறைப்பாடு செய்தவருக்கு எதிராக முறைப்பாடு செய்ய தமது தரப்பு விரும்புவதாக நீதிவானிடம் கேட்டனர்.
குறித்த முறைப்பாடுகளை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
நவகமுவ, பொமிரிய ராஸ்ஸபான பிரதேசத்தில் வீடு ஒன்றின் அறையில் பௌத்த தேரருடன் இளம் பெண்ணும் தாயும் இருந்தபோது பலவந்தமாக அத்துமீறி நுழைந்த தாக்கிய குற்றச்சாட்டில் நவகமுவ பொலிஸார் கைது செய்திருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பிலான காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
இரு பெண்களுடன் ஒரே அறையில் இருந்த பிக்கு; நையப்புடைந்த பிரதேச மக்கள்
பெண்களுடன் உல்லாசத்தில் இருந்த தேரரை தாக்கிய நால்வர் கைது; அமைச்சரிடம் இருந்து பறந்த உத்தரவு
பெண்களுடன் சிக்கிய பிக்குவை தண்டிப்பதற்கு நீங்கள் யார்? கொதித்தெழும் பெளத்த பிக்கு!