பெண்களுடன் உல்லாசத்தில் இருந்த தேரரை தாக்கிய நால்வர் கைது; அமைச்சரிடம் இருந்து பறந்த உத்தரவு
கொழும்பு, நவகமுவை, ரகஷபான வீதி பிரதேசத்தில் விகாரையொன்றுக்குள் வைத்து பல்லேகம சுமண தேரர் மற்றும் இரண்டு பெண்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் மீது விகாரையின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
காயமடைந்த தேரர் மற்றும் பெண் வைத்தியசாலையில்
காயமடைந்த தேரர் மற்றும் பெண் ஒருவரும் சிகிச்சைக்காக நவகமுவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான மற்றைய 22 வயதுடைய பெண்ணும் பாதுகாப்புக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
விகாரை ஒன்றின் பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் ஒரே அறையில் இருந்த நிலையில் பிரதேச மக்களால் தாக்கப்படும் காணொளி வெளியாகி சர்சையை ஏற்படுத்தியிருந்தது.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விடுத்த உத்தரவு
நவகமுவ பிரதேசத்தில் தேரர் ஒருவரையும், இரண்டு பெண்களையும் தாக்கிய நபர்களை கைது செய்யுமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அவர்களை கடுமையாக தாக்கியமை பாரிய குற்றமாகும். எவருக்கும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது. என்றும் அமைச்சர் டிலான் தெரிவித்தார்.
உடனடியாக குறித்த குழுவினர் கைது செய்யப்பட வேண்டும். மேலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் நவகமுவ பொலிஸ் தலைமையகத்துக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இந்த உத்தரவை பிறப்பித்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.