14 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த தந்தையின் நண்பருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
பாடசாலை செல்லும் பதினான்கு வயதுடைய சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அவரது தந்தையின் நண்பரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மொரவக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் ஊருபொக்க பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

மேலதிக விசாரணை
குறித்த சிறுவன் தனது வீட்டின் அருகிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு பட்டம் விடச் சென்ற போது சந்தேகநபரான தந்தையின் நண்பரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிறுவன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஊருபொக்க பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபரை கைது செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.