மனநலம் பாதிக்கப்பட்டவரை தாக்கிய மூவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மஸ்கெலியா, சாமிமலை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தலா 500,000 பிணையில் விடுதலை செய்யப்பட்ட மூவர் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 30.07.2025 அன்று சாமிமலை நகரில் கவரவலை பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை கடுமையாக மூன்று வர்த்தகர்கள் தாக்கியுள்ளனர்.

விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு
இதன் பின்னர் இவரை மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு இருந்து கண்டி போதனா வைத்திய சாலைக்கு மாற்றபட்டார்.
கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மீண்டும் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றம் செய்து தற்போது சிகிச்சை பெற்று மீண்டும் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்திய சாலைக்கு மாற்றப் பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர் மீது தாக்குதல் நடத்தி காய படுத்திய மூன்று சந்தேக நபர்களை மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணிப்புரையில் கைது செய்து ஹட்டன் நீதிமன்றில் கடந்த 3 ம் திகதி ஆஜர் படுத்த பட்ட வேலையில் பதில் நீதிவான் தலா ஒருவருக்கு 500000/= சரீர பிணையில் விடுதலை செய்யபட்டு இன்று 6 ஆம் திகதி மீண்டும் மன்றில் ஆஜராகிவும் ரூபாய் 7500/= ரொக்க பிணையில் செல்லும் படி உத்தரவு பிறப்பித்தது இருந்தார்.
அதன் படி மீண்டும் மூன்று சந்தேக நபர்களும் ஹட்டன் நீதி மன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.
இதன் போதே நீதிவான் சந்தேக நபர்களை எதிர் வரும் 13 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதே வேலை பிரதேசமக்கள் தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களுக்கு எதிராக ஆர்பாட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.