கொழும்பில் ஆசிரியரை படுகொலை செய்த தமிழருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த, மித்ராணி பெர்னாண்டோ என்ற பியானோ ஆசிரியையைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரை 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று (30) உத்தரவிட்டார்.
தெமட்டகொடவைச் சேர்ந்த 52 வயதான திருமணமாகாத தமிழர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வழக்கு விசாரணை
52 வயதான குறித்த சந்தேக நபர், கொழும்பு வீடுகளில் தோட்டங்களைச் சுத்தம் செய்யும் ஒரு தொழிலாளி என்றும், திருமணமாகாதவர் என்றும் பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.
2024ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி காலையில் ஆசிரியையின் வீட்டைச் சுத்தம் செய்யச் சென்ற சந்தேக நபர், அங்கு அவரைப் பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கொலை செய்துள்ளார்.
மட்டக்களப்பு கிணறு விவகாரம் ; அடுத்தடுத்து அவிழும் மர்ம முடிச்சுகள் ; கொழும்பில் சிக்கியவருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
குறித்த குற்றத்தை சந்தேக நபர் ஒப்புக்கொண்டதாகவும் முன்னர் பொலிஸார் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தனர்.
பெண்ணைக் கொலை செய்த பிறகு, சந்தேக நபர் அவரது வீட்டிலிருந்து கைபேசி, மடிக்கணினி மற்றும் எரிவாயு சிலிண்டர்களைத் திருடி, அவற்றை பல்வேறு நபர்களுக்கு விற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.