கொழும்பில் சொகுசு வீட்டிற்குள் சிக்கிய தம்பதி ; பெரும் மோசமான செயல் அம்பலம்
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள திட்டமிட்ட குற்றவாளியும், போதைப்பொருள் கடத்தல்காரருமான படோவிட்ட அசங்கவின் போதைப்பொருள் வலையமைப்பை சேர்ந்த தம்பதியினர் அடுக்குமாடி குடியிருப்பில் ஆடம்பரமான வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெஹிவளையில் உள்ள தனியார் வங்கிக்கு அருகில் சந்தேகநபர்களான தம்பதியினர் இன்று (18) ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட தம்பதியினர்
இவ்வாறு கைது செய்யப்பட்ட தம்பதியினர் தெஹிவளை, படோவிட்ட கட்டம் 5 பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
படோவிட்ட அசங்கவின் போதைப்பொருள் வலையமைப்பை நடத்தி வந்த தம்பதிகள் குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோசடி நடவடிக்கை இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில் போதைப்பொருட்கள் தற்போது வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று தலைமறைவாக உள்ள படோவிட்ட அசங்க என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரான தம்பதியினர் தெஹிவளை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆடம்பரமான வீட்டைவாடகைக்கு எடுத்து, அந்த வீட்டில் வசித்து, சிறிது காலமாக இந்த மோசடியை நடத்தி வந்தமையும் தெரியவந்துள்ளது.