மகிந்தவிற்காக தம்பதியர் செய்த நெகிழ்ச்சி செயல் ; பாசத்திற்காக ஒரு பயணம்
குருநாகல், கல்கமுவவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க தங்காலைக்கு ஆறு மணி நேர மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி கொழும்பிலிருந்து தங்காலை - கார்ல்டன் இல்லத்திற்கு சென்றிருப்பதை அறிந்ததும், அவர் மீதான தங்கள் பாசத்தின் காரணமாக இந்த பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்ததாக தம்பதியினர் தெரிவித்தனர்.
மஹிந்தவுக்காக பாடல்
பின்னர் அவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து உரையாடலில் ஈடுபட்டனர்.
அதேநேரம், முன்பள்ளி சிறுவர் பாடசாலையை சேர்ந்த குழுவொன்று அவர்களின் பெற்றோருடன் சேர்ந்து, முன்னாள் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.
இதன்போது, அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பாடலொன்றையும் பாடியுள்ளனர்.